வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேப்பனஹள்ளி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தி.க.குமார், வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளது தவாகா கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை 2 தொகுதி மற்றும் வன்னியர் 10.5 இடஒதுக்கீடு உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்தார். அதனை திமுக ஏற்காத நிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறினார். தற்போது சில கட்சிகளுடன் இணைந்து தனியாக தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்துள்ளார். தவாகா தலைமையிலான கூட்டணியில் 40 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 234 தொகுதிகளிலும் கேமரா சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம். 50 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி தந்துள்ளோம் என வேல்முருகன் அறிவித்துள்ளார். இரண்டு கட்டங்களாக 125 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொறுப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியின் தவாக வேட்பாளருமான தி.க.குமார், திடீரென அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேப்பனஹள்ளி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தி.க.குமார், வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளது தவாகா கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.#Politics #Leadership #Current_Affairs #Social_Impact #Public_Service