Guru Peyarchi 2026 Palangal in Tamil for All Zodiac Signs | 2026 குருப்பெயர்ச்சி பலன்கள் - 12 ராசிகளுக்கும் என்ன பலன்? சென்னை-திருச்செந்தூர் சிறப்பு ரயில் இன்று முதல்வார் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா: புதிய முதல்வராகிறார் டி.கே. சிவகுமார். ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது. ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம். அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம். மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026: 12 ராசிகளுக்கும்! 12 ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சி பலன்கள் Updated On :26 மே 2026, 12:10 pm IST 2026-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சிக்கான பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தஸ்ரீ ஸ்ரீபராபவ வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது வைகாசி மாதம் 12ம் தேதி (26-05-2026) செவ்வாய் கிடைத்தது. குருபகவான் கடக ராசிக்கு இடம் பெயர்ந்தார். குருபகவானின் பெயர்ச்சி பலன்கள் தொடர்பாக பல துறைகளில் பாதிப்புகள் ஏற்படும். கல்வி, பொருளாதாரம், இயற்கை சீற்றம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும். குருபகவானின் பெயர்ச்சி கடக ராசிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பெயர்ச்சி காரணமாக அரசியல் குழப்பம் சீரடையும். தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். இந்த பெயர்ச்சி காரணமாக இயற்கை சீற்றம் அதிகரிக்கும். இடி மின்னல் அதிகம். சூறாவளி காற்றுடன் அதிக மழை ஏற்படும். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும்.#2026 #zodiac_signs #jupiter_transit #perungulam_ramakrishnan #dinamani
