மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் நடவடிக்கை ஐபிஎல் அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை முதலில் அன்ஃபாலோ செய்தது பின்னர் மீண்டும் பின்தொடரத் தொடங்கினார். இந்த செயல் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்பது போதுமான நிலையிலும், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக ரசிகர்கள் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத ஹர்திக், அணியின் தோல்வியால் ஏற்பட்ட அதிருப்தியை இப்படி வெளிப்படுத்தியது முறையற்றது என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் வாகன் மற்றும் அலஸ்டைர் குக் ஆகியோர் தங்களது 'ஸ்டிக் டு கிரிக்கெட்' பாட்காஸ்டில் காரசாரமாக விவாதித்துள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் இந்தச் செயல் ஒரு தரக்குறைவான வேலை (Low Blow) என்று அவர்கள் சாடியுள்ளனர். நவீன காலத்தில் ஒரு அணியை சமூக வலைதளத்தில் அன்ஃபாலோ செய்வது என்பது அந்த அணிக்குத் தரும் மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது என்று குக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி பந்தில் மும்பை தோற்ற பிறகு ஹர்திக் இப்படி நடந்துகொண்டது அந்த ஃபிரான்சைஸிக்கே செய்த மிகப்பெரிய துரோகம் என்று மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவின் காயம் உண்மையானதுதானா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க, மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த வருட செயல்பாடு ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான ஒன்று என்று வாகன் விளாசியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்று கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக்கை, மிகப்பெரிய தொகை கொடுத்து மும்பை மீண்டும் வாங்கியது.#hardik_pandya #royal_challengers_bangalore #mumbai_indians #alastair_cook #michael_vu