தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் பெரும் பிரமாண்டம் கொண்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சீலநாயக்கன்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்திலிருந்து கோட்டை மைதானம் வரை பிரமாண்டமான ரோடு ஷோ நடத்தினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்றனர். ரோடு ஷோ முடிந்த பின்பு நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “இங்கே அமர்ந்திருப்பது தேர்தலுக்கான கூட்டணியாக மட்டும் நான் பார்க்கவில்லை. இதை திராவிட குடும்பமாக நான் பார்க்கிறேன். நான் பேசுவதற்கான குறிப்புகளை எல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர் எல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டு போய்விட்டார்கள். இன்று நிகழும் கொடுமையான அரசியலில் சொல்ல வேண்டிய சில கருத்துக்கள் தான் இருக்கின்றன. இவையும் அண்ணா எதிர்பார்த்ததுதான், தெற்கு தேய்கிறது என்று சொல்லும் பொழுது அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்றார்கள். பின்பு அவர் எடுத்த ஒரு எழுச்சி கொள்கை பின்வாங்க வேண்டியது நாட்டுக்காகத்தான் செய்தார். ஆனால் நான் எழுப்பிய குரல் அதற்கான காரணம் இன்னும் அப்படியே இருக்கிறது என்று என்றோ சொன்னார், இன்றும் அது அப்படியே இருக்கிறது என்பதுதான் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் போலி அரசியல், மக்கள் சார்பில்லாத அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று கூறினார். கமல்ஹாசன் தொடர்ந்து, “நான் இங்கே வந்தது, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி அமைய பிரச்சாரத்திற்கு மட்டுமல்ல. நாளை நமக்கு நடக்கப்போகும் அநீதிக்கு எதிரான குரலாகவும், எழுச்சி குரலாகவும் இது இருக்க வேண்டும்.#tamil_nadu #mkstalin #kamal_hasan #makkal_neethi_mayyam #thiraiyudhha_kazhagam
