மா. ஜோசப் விஜய் அரசு செயல்கள் குறிப்பு (மே 10 முதல் மே 28): மே 10: தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை சீரமைத்து சுவையுடன் கூடிய உணவுகளை விநியோகம் செய்யுமாறு உத்தரவிட்டார். செயலாளர்கள் நியமிக்கப்பட்டு துறைகள் ஒதுக்கப்பட்டன. மே 11: காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பெண் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 40 புதிய வாகனங்களை மருத்துவ நடவடிக்கைகளுக்காக தொடங்கிவைத்தார். சிங்கப்பெண் அதிரடிப்படை ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். மே 12: தமிழக அமைச்சரவை 2-வது விரிவாக்கத்தில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். மே 13: அரசு அலுவலகங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடந்த பண வசூலை தடுத்துவிட்டோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஷாஜகான், வன்னி அரசு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அரசு நிர்வாகத்தில் த.வெ.க.வினர் தலையிடக்கூடாது என அமைச்சர் என்.ஆனந்த் எச்சரிக்கை விடுத்தார். சென்னை கோட்டை வளாகத்தை பேட்டரி காரில் சுற்றிப்பார்த்தார். மே 14: கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது. மே 15: குறு விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். 14 லட்சத்து 22 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். திரைப்படங்கள் வெளியாகும் நாள் முதல் 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்தார். பாலியல் வழக்குகளை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.#politics #economic_growth #government #public_administration #social_welfare

Tamil Nadu cabinet: 10 ministers allotted portfolios, CM Vijay keeps home, police & public administration The Tamil Nadu Lok Bhavan has announced portfolio allocations for the new cabinet. Chief Minister C Joseph Vijay will lead the government. He has retained key departments. Other ministers have been assigned portfolios including finance, health, and education. This marks a significant administrative development for the new government. #Tamil_Nadu #Tamil #Nadu #Lok #Lok_Bhavan #Joseph_Vijay #Nadu_cabinet #Nadu_Lok #public_administration #cabinet
